” வைரக்கல்லையெல்லாம் வாரிட்டு போயிட்டானே ” -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட நகை கடை ஊழியர்

 

ஒரு நகை கடை ஊழியர் தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரங்களை திருடியதால் கைது செய்யப்பட்டார்

புதுதில்லியில் உள்ள சூரத் நகை கடையில், பாரத் ராஜ்பூர் என்ற வாலிபர் பணிபுரிந்தார் .இவர் டெல்லியில் உள்ள கரோல் பாகில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார் .இவர் அந்த கடையில் பணிபுரியும் போதே தனியாக சொந்தமாக யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊரில் ஒரு நகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார் .

அப்போது அந்த கடையில் அவர் பெரும் நஷ்டத்தினை சந்தித்தார் .அதனால் அவர் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய தான் பணியாற்றும் சூரத் நகை கடையிலிருந்த 6 வைரங்கள் மற்றும் ஐந்து தங்க காதணிகளை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து திருடி சென்றார் .அவற்றின் மதிப்பு 30 லட்ச ரூபாய் ஆகும் .பின்னர் அந்த கடையின் உரிமையாளர் லாக்கரிலிருந்த 6 வைரங்கள் மற்றும் ஐந்து தங்க காதணிகள் காணாததால் திடுக்கிட்டு கடை ஊழியர்களை விசாரித்தனர் .ஆனால் எவரிடமும் அந்த நகைகளை கண்டுபிடிக்க முடியாமல் அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .

போலீசார் வழக்கு பதிந்து அந்த கடை ஊழியர்களை விசாரித்த போது பாரத் அந்த வைரங்களை திருடியதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர் .இப்போது அந்த நகைகளை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர்

Contact Us