மோடியின் பிளான் என்ன ? ஷாருக்கான் மகனின் ஜாமீன் நிராகரிப்பு – ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு; வீட்டு உணவுக்கு அனுமதி மறுப்பு

அவனுக்கு தான் தெரியும்… ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்… என்ற தமிழ் பாடல் போல, மோடிக்கு தான் தெரியும் என்ன நடக்கிறது என்று… நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்டார். அவருடன், நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்த நாள்களில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட 8 பேரின் போலீஸ் காவல் வியாழக்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் வெள்ளிக்கிழமை ஜாமீன் கோரி மும்பை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், ஆர்யனும், அர்பாஸ் மெர்ச்சண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் பார்ட்டிக்கு சென்றுள்ளனர். இது தற்செயலாக நடந்த ஒன்று கிடையாது.

பார்ட்டி ஏற்பாட்டாளர்கள், போதைப்பொருள் சப்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். அனைவரும் வழக்கமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். வாட்ஸ் ஆப் சாட்டிங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. எனவே ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ,ர் ஆர்யன்கான் இதற்கு முன்பு எந்த வித குற்றத்திலும் ஈடுபட்டதில்லை. விருந்தினராக அழைத்ததால்தான் பார்ட்டிக்கு சென்றார். ஆர்யனிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 8 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆர்யன் உட்பட 8 பேரும் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொரோனா தனிமைபடுத்தும் அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையில் ஆர்யனுக்கு எந்த வித சலுகையும் காட்டப்படவில்லை. வீட்டு சாப்பாட்டுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

Contact Us