சீனக் கடலில் அமெரிக்க சப்மெரீன் எதனுடன் மோதியது ? 11 பேருக்கு காயம்- அமெரிக்கா அலேட் நிலையில்…

தென் சீனக் கடலில் சர்வதேச கடல் பரப்பில் பயணித்துக் கொண்டு இருந்த அமெரிக்க நாசகார நீர் மூழ்கிக் கப்பல், இனம் தொரியாத பாரிய பொருள் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் குறித்த நீர் மூழ்கியில் இருந்த 11 அமெரிக்க கடல்படையினர் படுகாயம் அடைந்துள்ள நிலையில். கப்பலுக்கு முன்னால் என்ன மர்ம பொருள் , தீடீரென எப்படி வந்து ? என்று தெரியாமல் அமெரிக்கா திணறியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க படைகள் உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது சீன அரசின் வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பொதுவாக நீர் மூழ்கிக் கப்பலில் சோனார் கருவிகள் உள்ளது. நாலா பக்கமும் என்ன இருக்கிறது, எது நகருகிறது என்று அனைத்தையும் அவர்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும். ஆனால்..

எப்படி குறித்த கப்பல் இனம் தெரியாத பாரிய பொருள் ஒன்றின் மீது மோதியது என்பது இன்னும் அறியப்படவில்லை. இது குறித்து அமெரிக்க பெண்டகன் எந்த ஒரு தவலையும் இதுவரை சரியாக வெளியிடவில்லை.

Contact Us