மிஷ்கின் ஒருமையில் அழைத்தும் அட்ஜஸ்ட் செய்த நடிகை.. அவ்வளவு நெருக்கமா.?

சினிமாவை பொருத்தவரை ஒரே மாதிரியான படங்களை ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். உதாரணமாக ஒரு இயக்குனர் தொடர்ந்து கமர்சியல் படத்தை மட்டுமே இறக்கி வந்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். அந்த இயக்குனரும் விரைவிலேயே பீல்ட் அவுட் ஆகிவிடுவார்.  ஆகவே ஒரு இயக்குனர் என்றால் ரசிகர்களின் எண்ணத்திற்கேற்ப வித்தியாசமான படங்களை வழங்க வேண்டும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர் என்றால் அது இயக்குனர் மிஷ்கின் மட்டுமே. வித்தியாசமான படங்களை வழங்குவதில் இவரை யாராலும் அடிக்கவே முடியாது. பொதுவாக மிஷ்கின் படங்கள் அனைத்தும் கொரியன் படங்களின் காப்பி என்ற விமர்சனம் உள்ளது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் என்ன? வேற்று மொழி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும் தனி திறமை வேண்டுமல்லவா.

சரி இப்போ விஷயம் என்னனா மிஷ்கின் இயக்கத்தில கடைசியா வெளிவந்த படம் துப்பறிவாளன். இதன் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் தான் பிசாசு-2. ஏற்கனவே பிசாசு என்ற தலைப்பில் மிஷ்கின் எடுத்த படம் நல்ல வரவேற்பை பெறவே தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார்.

என்னதான் ஓவர் அன்பா இருந்தாலும், இப்படி பொது வெளியில் அதுவும் பல பேர் முன்னிலையில் ஒரு முன்னணி நடிகையை இவ்வாறு ஒருமையில் பேசுவது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ஆண்ட்ரியா இப்படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளதால் தான் மிஷ்கின் மரியாதை இல்லாமல் பேசுகிறார் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

 

Contact Us