ஒரே வாரத்தில் இரண்டு முறை…. சமூக வலைத்தளங்கள் முடக்கம்…. மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனம்….!!

 

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சர்வதேச அளவில் சில மணி நேரங்களுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் தற்போது சேவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் திங்கள் கிழமை அன்று இவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரங்களுக்கு பயனர்கள் சிரமப்பட்டனர். இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு ₹52,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக Mark Zuckerberg அறிவித்துள்ளார். இந்த சேவை முடக்கத்திற்கு பயனர்களிடம் Mark Zuckerberg மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச அளவில் சில பகுதிகளில் மட்டும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11.50 மணி முதல் இன்று அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கிய நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை. இவ்வாறு இரு சேவைகளும் முடங்கியதை தொடர்ந்து டுவிட்டரில் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் வைரலானது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறியதாவது, “கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றததால் சில பயனர்களுக்கு சீரான சேவை கிடைக்கவில்லை. கடந்த முறை ஏற்பட்ட சேவை பாதிப்பும் தற்போது ஏற்பட்டுள்ளதும் ஒன்றல்ல. 2 மணி நேரத்தில் எங்கள் சேவையை அணுக முடியவில்லை என்பதற்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எங்களை எவ்வளவு சார்ந்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சிக்கலை சரி செய்துவிட்டோம். நீங்கள் பொறுமை காத்ததற்கு மீண்டும் எங்கள் நன்றி” என்று தெரிவித்துள்ளது.

Contact Us