ஒரு இளம்பெண்ணை 8 பேர்…ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்

 

ஒரு இளம் பெண்ணை 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையை தடுக்க வந்த பயணிகளையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய எச்சரித்திருக்கிறார்கள். ஓடும் ரயிலில் தான் இந்த பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது.

அக்டோபர் 8ஆம் தேதியான நேற்று இரவு உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநிலம் இகாத்புரி என்கிற ரயில் நிலையத்தில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் ஏறியிருக்கிறது.

அந்த கும்பல் ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை போன்றவற்றை பறித்திருக்கின்றனர். அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை 8 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.

தங்கள் கண்முன்னே நடந்த இந்த அக்கிரமத்தை தடுக்க வந்த பயணிகளையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தி எச்சரித்திருக்கிறார்கள். இதில், எட்டு பேருக்கு மேல் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

அந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், கசரா ரயில் நிலையத்தை வந்தடைந்த போது, அந்த கோச்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டு அபயக்குரல் எழுப்பி இருக்கின்றனர். இதைக் கேட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்து விட்டனர். தப்பி ஓடிய மேலும் 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டிருக்கிறார்கள்.

ஓடும் ரயிலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பயணிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Contact Us