“எத்தனை பேர்னே தெரியலே.. “-ப்ளஸ் டூ மாணவிக்கு மயக்க நிலையில் நடந்த கொடுமை.

 

பிளஸ் டூ படிக்கும் ஒரு மாணவியை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததால் அவர் இறந்தார்

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் நாவுசண்டி பகுதியில் ஒரு 17 வயதான மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து வருகிறார் .அந்த மாணவி தினமும் பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு ஆட்டோ ட்ரைவர் உள்பட சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .அவர்கள் அந்த மாணவியை அடைய பலமுறை வலை வீசியுள்ளார்கள் .ஆனால் அந்த மாணவி எதையும் கண்டுகொள்ளாமல் அவர் பள்ளிக்கு சென்று வந்தார் .
இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஆட்டோ ட்ரைவர் எக்ஸாம் எழுதிவிட்டு வந்த அந்த மாணவிக்கு குடிக்க மயக்க மருந்து கலந்து ஒரு குளிர் பானத்தை வாங்கி கொடுத்தார் .அந்த மாணவியும் தெரிந்தவர்தானே என்ற நம்பிக்கையில் அதை வாங்கி குடித்தார் .அதை குடித்த மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார் .உடனே சிலர் அந்த மாணவியை ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .பின்னர் அவரை பலாத்காரம் செய்து விட்டு ,மீண்டும் அவரின் வீட்டு வாசலில் கடுமையான காயங்களுடன் விட்டு சென்றார்கள் .வீட்டுக்கு வந்த அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி விட்டு இறந்து விட்டார் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த சமூக விரோத கும்பலை பிடிக்க அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து வருகின்றனர் .

Contact Us