மசாஜ் சென்டருக்கு வறீங்களா? – ஆளுங்கட்சி பிரமுகரை ஃபோன் போட்டு அழைத்த மஜா பெண்!

என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரை ஃபோன் போட்டு மசாஜ் சென்டருக்கு அழைத்ததும் இல்லாமல், போலீசிலிடம் சொல்வேன் என்றதற்கு ஏளனமாய் சிரிக்கும் பெண்ணின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரை ஃபோன் போட்டு மசாஜ் சென்டருக்கு அழைத்ததும் இல்லாமல், போலீசிலிடம் சொல்வேன் என்றதற்கு ஏளனமாய் சிரிக்கும் பெண்ணின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறஎன்.ஆர் காங்கிரஸ் பிரமுகரை ஃபோன் போட்டு மசாஜ் சென்டருக்கு அழைத்ததும் இல்லாமல், போலீசிலிடம் சொல்வேன் என்றதற்கு ஏளனமாய் சிரிக்கும் பெண்ணின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் அத்துமீறும் மசாஜ் சென்டர்கள் வலுக்கட்டாயமாக மசாஜ்க்கு அழைத்த பெண்ணை காவல்துறையினரிடம் கூறுவேன் என்று சொன்ன அரசியல் பிரமுகரிடம் சிரித்துக் கொள்கிறேன் என்று பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் மோகன் கமலுக்கு புதுச்சேரியை சேர்ந்த தனியார் மசாஜ் சென்டரில் இருந்து பெண் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘மசாஜ் சென்டருக்கு வருகிறீர்களா’ என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த மோகன் கமல், ‘நீங்கள் யார்; எதற்காக எனக்கு போன் செய்கிறீர்கள்; அடுத்த முறை போன் செய்தால் காவல் துறையிடம் சொல்லுவேன்’ என்று கூறினார். அதற்கு மசாஜ் சென்டரில் இருந்து பேசிய பெண், ‘காவல் துறையிடம் சொல்லுவீர்களா; ஒரு நிமிடம் இருங்கள் சிரித்துக் கொள்கிறேன்’ என்று ஏளனமாக பேசி உள்ளார்.

அரசியல் பிரமுகர் ஒருவரே போலீசிடம் சொல்லுவேன் என்று கூறியபோதும், கொஞ்சம்கூட அச்சமின்றி சிரித்து கொள்கிறேன் என்று மசாஜ் சென்டர் பெண் கூறியுள்ளது பொதுமக்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனையடுத்து, இதுதொடர்பாக என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் மோகன் கமல் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மோகன் கமல் தரப்பு வழக்கறிஞர் டேவிட் லூர்து நாதன் கூறும்போது, ‘புதுச்சேரியில் மசாஜ் சென்டர்கள் புற்றீசல் போல் பரவி வருகிறது. மசாஜ் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரி இளைஞர்களிடம் தவறான ஒரு வழிமுறைகளை மசாஜ் சென்டர்கள் கையாண்டு வருகின்றன. மசாஜ் என்ற பெயரில் பல்வேறு தவறான செயல்களை செய்து வருகின்றனர்.

இதில் காவல்துறையினருக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. ஏனென்றால் காவல்துறையுடன் கூட்டணி அமைத்து இவர்கள் செயல்படுவதாக தெரிகிறது. போலீசாரிிடம் சொல்லுவேன் என்று கூறும்போது, மசாஜ் சென்டரில் பணிபுரியும் அப்பெண் சிரிக்கிறார் என்றால், அது காவல்துறையின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

இதுபோன்ற மசாஜ் என்ற பெயரில் தவறான செயல்களில் ஈடுபடும் சென்டர்கள் மீது காவல் துறையும், புதுச்சேரி அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

Contact Us