கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து புஸ்பராஜ் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 09.10.2021 நேன்றைய தினம் இரவு வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்த நிலையில் 10.10.2021 இன்று நண்பகல் இறந்தநிலையில் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் அவரின் சடலம் இனங்காணப்பட்டதையடுத்து தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.குறித்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த நபர் 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Contact Us