சாலையில் மகனுடன் நடந்து சென்ற தாய்.. வாகனத்தில் மோதி கொல்ல முயன்ற நபர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

 

இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து இறங்கிய 20 வயது இளைஞர், அச்சிறுவனின் கண்முன்பே அவரின் தாயை கத்தியால் குத்தியிருக்கிறார்.

அதன்பின்பு காரில் வேகமாக அங்கிருந்து தப்பிவிட்டார். சிறிது நேரத்தில், காவல்துறையினரும் மருத்துவ உதவிக்குழுவினரும் சம்பவ இடத்தில் குவிந்தனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர், அங்கு சென்றபோது, 20 வயது இளைஞர் உயிரிழந்து கிடந்திருக்கிறார். கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Contact Us