கத்தார் தலைநகரில்…. பிரபல நாட்டுடன் பேச்சுவார்த்தை…. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்….!!

 

ஆப்கானின் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று முதன் முறையாக தலிபான்கள் மற்றும் அமெரிக்க அரசு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆப்கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர் கான் முட்டாகி, எங்களின் ஆட்சியை பலவீனப்படுத்தும் விதமாக எதுவும் செய்ய கூடாது என அமெரிக்காவை எச்சரித்துள்ளார். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க படையினரால் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆப்கானில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் இந்த கருத்தை தெரிவித்தனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான் முட்டாகி விரிவாக பேசுகையில், “ஆப்கானில் அரசை சீர்குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நல்லதல்ல என்று நாங்கள் அவர்களிடம் தெளிவாக கூறினோம். ஆப்கானுடனான நல்லுறவே அனைவருக்கும் நல்லது. ஆப்கானில் இருக்கும் அரசை வலுவிழக்கச் செய்ய எதுவும் செய்யக்கூடாது. அது மக்களுக்கு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆப்கானில் கொரோனா தடுப்பூசி போட அமெரிக்கா உதவும். அதோடு பொறுமையாக இருந்து அமெரிக்கா நல்லுறவை பேணி காக்கும் என உறுதியளித்துள்ளது. இதனால் ஆப்கான் பிரச்சினைகளில் இருந்து விரைவில் வெளிவரும்” என்றும் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறப்பு துணை பிரதிநிதி டாம் வெஸ்ட், அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி முகமை அலுவலர் சாரா சார்லஸ் ஆகியோர் அமெரிக்கா சார்பில் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Contact Us