கோடிக்கணக்கான பணத்தை பெற மறந்த நபர்… இறுதி நொடியில் காத்திருந்த அதிர்ஷ்டம்..!!

 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் கிரிகோரி வாரேன் என்ற நபர், லாட்டரி சீட்டை எப்போதாவது வாங்கும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த சீட்டிற்கு, $195,935 பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆனால் அவர் தான், லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டார்.

இதனால், பரிசுத்தொகையை வாங்க அவர் செல்லவில்லை. இந்நிலையில், அந்த சீட்டு திடீரென்று அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதன்பின்பு, தனக்கு பரிசு கிடைத்திருக்கிறதா? என்று தற்செயலாக பார்த்துள்ளார். அப்போது, பரிசு தனக்கு கிடைத்திருப்பதை அறிந்த அவர், உடனடியாக பதறியடித்து கொண்டு ஓடி, பரிசுத்தொகையை வாங்கிவிட்டார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் எப்போதாவது தான் லாட்டரி சீட்டு வாங்குவேன், இந்த தடவை சீட்டு வாங்கியதை மொத்தமாக மறந்துபோனேன். அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில், எனக்கு பரிசுத்தொகை கிடைத்துவிட்டது.

இந்த பணம் மூலம், தொழில் தொடங்கவுள்ளதாகவும், தன் மகன் உயர்நிலை கல்வி முடித்து பட்டம் பெறும் சமயத்தில், பெரிய பரிசு ஒன்றை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Contact Us