ஓடும் பேருந்தில்…. பெண்ணிற்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. சிசிடிவியில் சிக்கிய புகைப்படம்….!!

 

லண்டனில் Northolt உள்ள White Hart ரவுண்டானாவிற்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் பேசியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் 282 என்ற எண் கொண்ட பேருந்தில் Ealing மருத்துவமனைக்கு செல்வதற்காக ஏறியுள்ளார். இந்த வாலிபரும் அப்பெண்ணை தொடர்ந்து ஏறி அவரிடம் அவதூறாக பேசியதுடன் அவரை கண்ட இடங்களில் தொட்டுள்ளார். இது குறித்து துப்பறியும் ஆய்வாளரான John Millward கூறியதில் “அந்தப்பெண் மிகவும் அச்சத்தில் உள்ளார்.

அவருக்கு அதிர்ஷ்டவசமாக எந்த உடல் ரீதியான காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். தற்பொழுது அந்த வாலிபரை தேடும் பணியைத் தொடங்கியுள்ளோம். அதற்காக அவரின் புகைப்படத்தை சிசிடிவி காட்சியில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளோம். எவரேனும் இந்த வாலிபர் குறித்து அறிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவியுங்கள். இது எங்களின் விசாரணைக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Contact Us