“இப்படி ஒரு கெட்ட பழக்கத்தை வச்சிக்கிட்டு என்னோட ஏன் பழகினே ” -கொதித்த மனைவிக்கு நேர்ந்த கதி

 

கணவனின் மோசமான குடி பழக்கத்தால் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், 28 வயதான சுஜிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களின் திருமணத்துக்கு பிறகு சென்னைக்கு குடி வந்தனர் .ஆனால் கொரானா பரவல் காரணமாக அந்த கணவனுக்கு வேலை போய் விட்டது .அதன் பிறகு அந்த கணவர் தன்னுடைய மனைவியை அவரின் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டார் .பின்னர் அவர் மட்டும் சென்னையில் இருந்தார் .அப்போது அவர் தினமும் மது போதைக்கு அடிமையானார் .அவரின் குடிப்பழத்தை பற்றி கேள்விப்பட்ட அந்த சுஜிதா மிக்வும் மன வேதனையடைந்தார் .பின்னர் மனைவியை சந்திக்க வந்த செல்வகுமாரிடம் அந்த சுஜிதா குடிப்பழக்கத்தை விடுமாறு பலமுறை கேட்டார் .ஆனால் அவர் அந்த பழக்கத்தை விடாமலும் ,வேலைக்கு போகாமலும் இருந்தார். மேலும் கடந்த 7 மாதங்களாக அவர் மனைவியை பார்க்க வரவில்லை .

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் தனியாக இருந்த சுஜிதா, தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து சுஜிதாவின் தாய் விஜயபானு அளித்த புகாரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us