வெளிநாட்டில் வேலை செய்த கணவனுக்கு மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பி வைத்த கால்டாக்சி டிரைவர்

 

உன் மனைவி பேசாவிட்டால் நானும் அவளும் உல்லாசமாக இருந்த வீடியோவை உனக்கு அனுப்பி விடுவேன் என்று வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அப்பெண்ணின் கணவனுக்கு மிரட்டல் விடுத்ததால், அவர் மனைவியை பிரிந்து விட்டார். அடுத்து அந்தப் பெண்ணிடமே நேரில் வந்து, நீ என்னுடன் பேசாவிட்டால் நீயும் நானும் உல்லாசமாக இருந்த வீடியோவை உன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி விடுவே என்று மிரட்டி வர, போலீசில் புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த முப்பத்தி ஒரு வயது இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அரும்பாக்கத்தில் தங்கியிருந்து மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் அந்த பெண்.

சில மாதங்களுக்கு முன்பாக கொல்கத்தாவில் நடந்த உறவினர் திருமண நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கால் டாக்ஸியில் சென்றிருக்கிறார். கால் டாக்ஸி டிரைவர் நன்கு பேச்சு கொடுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்திருக்கிறார். இதனால் கொல்கத்தாவில் இருந்த மூன்று நாட்களும் அடுத்தடுத்து அந்த கால்டாக்சி டிரைவரையே அழைத்து பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார்.

பின்னர் அவர் சென்னை வந்து விட்டார். சென்னை திரும்பியதும் அந்த கால் டாக்ஸி டிரைவர் அப்பெண்ணுக்கு போன் செய்து பரிவுடன் அவரது மன நலம் பாதிக்கப்பட்ட மகன் குறித்து விசாரித்து இருக்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர் . மகனை நேரில் பார்க்க வேண்டும் என்று அந்த கால்டாக்சி டிரைவர் சொல்ல, அவரும் சென்னை. முகவரியை சொல்லியிருக்கிறார்.

சென்னைக்கு வந்து அந்த இளம்பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இருவரும் பல முறை தனிமையில் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்கள். இவர்கள் உல்லாசமாக இருந்த காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்தி வைத்திருக்கிறார் கால்டாக்சி டிரைவர். இந்த வீடியோவை வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், கால் டாக்சி டிரைவரின் நம்பரை பிளாக் செய்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சென்னைக்கு நேராக வந்து அப்பெண்ணிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அதிலிருந்த நம்பர்களை வைத்துக்கொண்டு அந்த பெண்ணின் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கணவனுக்கு போன் செய்து, நானும் உன் மனைவியும் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி வைக்கவா? இல்லை, உன் மனைவியுடன் பேச வைக்கிறாயா? என்று கேட்க , வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த கணவனுக்கு அங்கே என்ன நடக்கிறது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து தன் மனைவியுடன் இனி வாழ முடியாது என்று கணவன் சொல்லிவிட்டார். . இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அப்பெண். அந்த நிலை வந்து விட்ட பின்னரும், நேரில் வந்து, என்னுடன் பேசாவிட்டால் இந்த வீடியோவை உன் குடும்பத்தினருக்குக்ம், நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்று சொல்ல, அதற்கு மேலும் பொறுமையாக இருக்க கூடாது என்று சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கொல்கத்தாவை சேர்ந்த கால் டாக்சி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.

Contact Us