ஜட்டியில் கை வைத்த அதிகாரியை தட்டி விட்ட பெண் -அடுத்து பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

ரயிலில் வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததால் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டார்

மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் வசிக்கும் 35 வயதான தினேஷ் சவான் என்பவர் மும்பையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அதிகாரியாக பணியாற்றுகிறார் . அந்த அதிகாரி தினேஷ் சவான் கடந்த வியாழக்கிழமை தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு ஒரு வழக்கு விஷயமாக சென்று விட்டு மீண்டும் மும்பைக்கு ஒரு ரயிலில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அவர் பயணம் செய்த ரயிலில் 25 வயதான பெண்ணொருவர் அவருக்கு எதிரே அமர்ந்து பயணம் செய்தார் .

அப்போது அந்த அதிகாரி திடீரென்று அந்த பெண்ணை தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டார் .மேலும் அவரின் பையிலிருந்து அவரின் உள்ளாடைகளை எடுத்து அதை முகர்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டார் .அதனால் அந்த பெண் கூச்சல் போட்டு கத்தினார் .உடனே அந்த ரயிலில் அவரோடு பயணம் செய்த மற்ற பயணிகள் அங்கு கூடினர் .அப்போது அந்த பெண் தனக்கு அந்த அதிகாரியால் நேர்ந்த கொடுமையை கூறினார் .பின்னர் அந்த ரயில் பயணிகள் அந்த அதிகாரி சவானை அந்த ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர் .அதன் பிறகு அந்த அதிகாரி சவாண் ரயில்வே போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .இந்த சம்பவம் பற்றி ஒரு அதிகாரி கூறும்போது அந்த அதிகாரி சவானுக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் மீண்டும் மத்திய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தில் அவர் நியமிக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

Contact Us