2 நாட்கள் 7 பேர்… சிறுமி மருத்துவமனையில் அனுமதி

 

ஒரு சிறுமியை ஏழு பேர் இரண்டு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் புறநகரில் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.

நாக்பூர் புறநகரில் வசித்து வரும் அந்த 17 வயது சிறுமி தனது காதலனுடன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று இருக்கிறார். அங்கே காதலனும் அந்த சிறுமியும் உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அந்த சமயத்தில் காதலனின் நண்பர்கள் வந்ததால் அவர்களும் அந்த சிறுமியை அனுபவிக்கவேண்டும் என்று சொல்ல, காதலியின் அனுமதி இல்லாமலேயே நண்பர்களுக்கு காதலியை விருந்து வைத்திருக்கிறார்.

நண்பர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பின்னரும் அந்த சிறுமி காதலனுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.

என்ன சொல்லி சமாளித்தார்? சமாதானம் செய்தாரோ தெரியவில்லை மறுநாளும் அதே இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று இருக்கிறார். அவரும் காதலனுடன் அங்கு காதலன் சொன்னதை நம்பி சென்றிருக்கிறார்.

அங்கே இருவரும் தனிமையில் இருந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் வந்து இருவரையும் தாக்கியிருக்கிறார்கள். சரமாரியாக தாக்கி காதலனை கட்டிப்போட்டு விட்டு மூன்று பேரும் சிறுமியை வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத காதலனும் காதலியும் அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்கள் 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது உண்மையை சொல்லி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அங்கு சிகிச்சை நடந்து வரும் நிலையில், நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க, அவர்கள் சிறுமியின் காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து இருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Contact Us