லண்டனில் ஆஸ்ரா செனிக்கா பாஃர்முலாவை திருடிய ரஷ்ய உளவாளி- புட்டினுக்கு அனுப்பி விட்டார் !

பிரித்தானியாவில் உள்ள ஆஸ்ரா செனிக்கா மருந்து தயாரிப்பு நிலையத்தினுள்,  ஊடுருவிய ரஷ்ய உளவாளி ஒருவர். புளூ பிரின்ட் என்று சொல்லப்படும், மருந்தை தயாரிக்க ஏதுவாக உள்ள பாஃர்முளாவை அப்படியே திருடி. அதனை ரஷ்யாவுக்கு அனுப்பி விட்டார் என்பதனை, அங்குள்ள அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளார்கள். இதனை தற்போது பிரித்தானிய MI5 உளவு நிறுவனம் ஆராய்ந்து வருவதோடு. இந்த தகவலை உத்தியோக பூர்மாக, பொறிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.  ஆஸ்ரா செனிக்காவின் ரகசியத்தை அறிந்து கொண்ட புட்டின், ரஷ்யாவில் தற்போது தயாரிக்கப்படும் …

ஸ்புட்-நிக் தடுப்பு மருந்தை மேலும் மேம் படுத்தி, புது தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்து, அதனை  சந்தையில் இறக்குவார் என்று எதிர்பார்கப்படுகிறது. ஆக்ஸ்பேட் பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இணைந்து மாதக் கணக்காக தூக்கம் இன்றி, ஆராய்ந்து கண்டு பிடித்த தடுப்பு மருந்தை. ஒரே நொடியில் களவாடிச் சென்றுள்ளது ரஷ்யா. இது பிரித்தானியாவின் பாதுகாப்பில் பெரும் ஓட்டைகள் இருப்பதை காட்டுகிறது. Source: MI-5 : web : Russian spy STOLE the blueprint for the Oxford/AstraZeneca jab so Putin could then use it to develop his own Sputnik vaccine, security sources tell ministers :

ஏற்கனவே ரஷ்ய உளவாளி ஒருவர், பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில், பிரிட்டனில் தங்கி இருந்த வேளை. அவருக்கு பப் ஒன்றில் வைத்து ரஷ்ய உளவாளிகள் பொலோனியம் என்ற கதிரியக்க பொருளை, பியரில் போட்டு கொடுத்து. 12 நாட்களில் அவரை கொன்றார்கள். இன் நிகழ்வு பலருக்கு நினைவில் இருக்கும்.

 

Contact Us