பாதாளம் வரை பாயும் மகாராணியின் பவர்: அன்ரூ மீது பொலிசார் விசாரணை செய்ய மாட்டார்கள் என்று அறிவிப்பு !

இளவரசர் அன்ரூ மீது எந்த ஒரு விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்று, மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் தான் 17 வயதாக இருக்கும் போது, தன்னை அன்ரூ கற்பழித்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் இதனை விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ள போதும். அது பிரித்தானியாவில் செல்லுபடியாகாது. அமெரிக்க நீதிமன்றத்தல், வழக்கு பதிவு பத்திரத்தை கூட அன்ரூவிடம் கொடுக்க முடியவில்லை. இன் நிலையில் குறித்த பெண் பிரித்தானியாவில் உள்ள நீதிமன்றத்தின் உதவியையும், மெற்றோ பொலிடன் பொலிசாரின் உதவியையும் நாடினார். ஆனால் இறுதியாக நீதிமன்றமும் இதனை பெரிது படுத்தவில்லை. போதாக் குறைக்கு பொலிசாரும்…

இதில் தாம் தலையிட விரும்பவில்லை என்று கூறி கை கழுவி விட்டார்கள். இது தனி ஒருவரால் தொடுக்கப்பட்ட வழக்கு என்றும். அமெரிக்க அரசாங்கமோ இல்லை அமெரிக்க பொலிசாரோ இந்த வழக்கை தொடுக்கவில்லை. எனவே அதற்கு உதவ எம்மால் முடியாது என்று கூறிவிட்டது பிரித்தானியா. அம்மையாரின் பிள்ளையாச்சே. அவர் பவர் எங்கே எல்லாம் பாயும் என்று தெரியாதா என்ன ?

Contact Us