”தளபதி 67”…. மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், தளபதியின் 67 படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us