ஸ்பெயினில் வெடித்து சிதறி வரும் எரிமலை.. 6000 மக்கள் வெளியேற்றம்..!!

 

ஸ்பெயின் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று லா பல்மா தீவிலுள்ள, கும்ரே வீஜா எரிமலை வெடித்து சிதற தொடங்கியதோடு, தொடர்ந்து அதிலிருந்து லாவா குழம்பு வெளியேறி வருகிறது. மேலும் மலைமுகட்டில் ஆறு போன்று லாவா குழம்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் மலையடிவாரத்தில் வாழும் 4 கிராமங்களில் இருக்கும் அதிகமான குடியிருப்புகளும் கட்டிடங்களும், அதை சுற்றி இருக்கும் நிலங்களும் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு வசிக்கும் 6,000-த்திற்கும் அதிகமான மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், எரிமலை வெடிப்பால் வானத்தில் படர்ந்து காணப்பட்ட சாம்பல், சிறிது குறைய தொடங்கியிருக்கிறது. அதனையடுத்து, லா பல்மா தீவில் இருக்கும் விமான நிலையம் திறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us