அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்….!!

 

ஹவாயில் நாலேஹுவு என்ற தீவு உள்ளது. இத்தீவிற்கு அருகில் உள்ள கடற்கரையில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் அருகிலுள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் தானாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாலேஹுவுக்கு தெற்கில் 17 மைல்கல் தொலைவில் முதல் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனையடுத்து 20 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் இரண்டாவது நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Contact Us