கடத்தப்பட்ட கன்னியாஸ்திரி…. பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பு…. நம்பிக்கை தெரிவித்துள்ள இடைக்கால அதிபர்….!!

 

ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டில் இருக்கும் கொலம்பியாவைச் சேர்ந்தவர் 59 வயதான கன்னியாஸ்திரி குளோரியா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பிணைக்கைதியாக அந்நாட்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். மேலும் இவரை மீட்பதற்கான பணிகளை மாலி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு பயங்கரவாதிகளிடம் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து குளோரியாவை மாலி அரசு தற்போது மீட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கன்னியாஸ்திரி விடுவிப்பு

இதனையடுத்து கன்னியாஸ்திரி குளோரியா மாலியின் இடைக்கால அதிபராக இருக்கும் அசிமி கோய்ட்டாவை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாளிகையின் இடைக்கால அதிபர் நம்பிக்கை அளித்துள்ளார்.

Contact Us