“காதலியை வயலில் வைத்து …”கிண்டல் செய்த காதலிக்கு காதலனால் நடந்த கொடுமை

 

காதலி கிண்டல் செய்ததால் கோவப்பட்ட காதலன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

ராஜஸ்தான் ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பெடாவா பகுதியில் 22 வயதான ஜூபர் என்ற வாலிபரும் 19 வயதான பூஜா மெஹர் என்ற பெண்ணும் அமிர்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .அவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் . இந்த இருவரின் காதல் அந்த பூஜாவின் தந்தை ராதேஷியதுக்கு தெரிய வந்து, அவர் அந்த காதலன் மீது கோபமாக இருந்தார் ,அதனால் அவர் மகளோடு இருக்கும் உறவினை கை விடுமாறு எச்சரித்தார் .ஆனால் ஜூஜர் அவர் பேச்சை கேட்காமல் அந்த பெண்ணோடு காதலை தொடர்ந்தார் .அதனால் அந்த பூஜாவின் தந்தை அந்த காதலனை கடுமையாக தாக்கினார் .அதன் பிறகு அந்த காதலி பூஜா அந்த காதலனை பலமுறை இந்த தாக்கல் சம்பவத்தினை சொல்லி கிண்டல் செய்தார்.மேலும் அவர் அந்த காதலனிடம் தன்னை மறந்து விடுமாறு கூறிவிட்டு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .
இதனால் கோவப்பட்ட அந்த காதலன் பூஜாவின் தந்தையையும், கிண்டல் செய்த காதலியையும் பழிவாங்க முடிவெடுத்தார் .அதனால் கடந்த வாரம் அந்த பூஜா விவசாய வயலில் இருந்த போது ,அங்கு சென்று அந்த பெண்ணை கதற கதற கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .பின்னர் இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் அந்த காதலனை கைது செய்தனர் .

Contact Us