“இந்த பலான படத்தை பாருங்க மேடம்” -பெண்ணை டார்ச்சர் செய்த டாக்சி ட்ரைவர்

 

பயணத்தை கேன்சல் செய்த பெண் பயணிக்கு ஆபாச படம் அனுப்பிய டாக்சி ட்ரைவர் கைது செய்யப்பட்டார்

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள போரிவ்லியில் ஒரு திருமணம் ஆன பெண் வசித்து வந்தார் .அவர் அக்டோபர் 3-ஆம் தேதி தனது கணவர் மற்றும் மாமனார் பயணம் செய்வதற்காக போரிவ்லியில் இருந்து தெற்கு மும்பைக்கு போக ஒரு டாக்சியை முன்பதிவு செய்தார்.ஆனால் அதிக கட்டணம் மற்றும் கார் ஏசி பழுதடைந்ததன் காரணமாக அந்த பெண் அதை ரத்து செய்தார்.
இதனால் மும்பையை சேர்ந்த அந்த டாக்சி ஓட்டுநர் உத்ச்குமார் கோபமுற்றார் .அந்த பெண்ணை பழிவாங்க ஒரு தவறான வழியை தேடினார்
அதன் படி அந்த பெண் கேன்சல் செய்த அடுத்த நாளிலிருந்து, அந்தப் பெண்ணுக்கும் அவர் கணவனுக்கும் பல்வேறு எண்களில் இருந்து மிரட்டல்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் மற்றும் தவறான மெஸேஜ் வரத் தொடங்கின. அதனால் அந்த பெண் எல்டி மார்க் போலீஸை அணுகி அந்த டாக்சி ட்ரைவர் மீது புகார் கொடுத்தார் .
அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்ய தேடுதல் வேட்டையை தொடங்கினர் . அப்போது அந்த டாக்சி ஓட்டுநர் பீகாரில் இருப்பதை கண்டுபிடித்தனர் . பின்னர் ஒரு போலீஸ் குழு பீகார் சென்று அந்த ஓட்டுனரை கைது செய்தது.

Contact Us