ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகாத உறவு: மது விருந்தில் கறம் வைத்து நடந்த கொலை

ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகாத உறவு: மது விருந்தில் கறம் வைத்து நடந்த கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியில் நபிஸ் என்பவரின் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது . இவரது வீட்டில் நபிஸ், தென்னூரை சேர்ந்த அருண் என்ற அருண்ராஜ் , வடலூரில் சேர்ந்த அப்பு (எ) பிரேம் , விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார், மற்றும் கலை ஆகிய 5 பேரும் மனோஜ்குமாரின் பிறந்தநாள் பார்ட்டி நடத்தி மது விருந்து நடந்துள்ளது.

அப்போது முன்விரோதம் காரணமாக மது போதையில் ஏற்பட்ட தகராறில் அருண்ராஜியை மற்றவர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அருண் ராஜியை காட்டுக்கூடலூர் சாலையில் வீசி விட்டு 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து சாலையோரமாக ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளதாக கூறி விட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின்போது நபிஸ் – வீட்டிலிருந்து காட்டுக்கூடலூர் சாலைவரை பல இடங்களில் ரத்தம் சிதறிக் கிடந்தது. அதன் காரணமாக ஓட ஓட அருணை கத்தியால் வெட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர் மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களை பல இடங்களில் சேகரித்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தது யார்?, அந்த போன் யாருடையது ? என்ற கோணத்தில் விசாரித்ததில் கொலை பின்னணி தெரிய வந்தது.

அதாவது அருண்ராஜியும், வடலூரை சேர்ந்த பிரேம் என்பவரும் சென்னை மெரினா பீச்சில் சாவிக்கொத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். அப்போது பிரேமுக்கும் சென்னையில் மீன் வியாபாரம் செய்து வரும் தேன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு தகாத உறவு ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் அதே பெண்ணிடம் அருண்ராஜூக்கு தொடர்பு ஏற்படவே பிரேமுக்கும், அருணுக்கும் விரோதம் ஏற்பட்டு நாளடைவில் முன்விரோதம் வளர்ந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நபீஸ் வீட்டில் மனோஜ் குமாருக்கு பிறந்தநாள் மது விருந்துக்கு அருண் உட்பட நண்பர்கள் அழைக்கப்பட்டு 5 பேரும் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். அப்போது மது போதையில் முன்விரோதம் காரணமாக சரமாரியாக அருணை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கொலைக்கு காரணமான பிரேம், கலை, மனோஜ் குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி நபீசை தேடி வருகின்றனர்.

Contact Us