தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த மக்கள்.. ரயிலில் அடிபட்டு மூவர் பலி.. பிரான்சில் துயர சம்பவம்..!!

 

பிரான்ஸில் உள்ள Saint-Jean-de-Luz என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் புலம்பெயர்ந்தோர் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணியளவில் Bordeaux-க்கு சென்று கொண்டிருந்த ரயில், அவர்கள் மேல் ஏறிச்சென்றது. இதில் மூவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மீதமுள்ள ஒருவர், படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதனை காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். உயிரிழந்த மூவரில் இருவர் அல்ஜீரியா நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை.

 

Contact Us