கரை ஒதுங்கிய படகில்…. 16 உடல்கள் மீட்பு…. தகவல் அளித்த ஐக்கிய நாடுகளின் ஆணையம்….!!

 

லிபியாவில் கரை ஒதுங்கிய படகுகளில் இருந்து 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உலக அளவில் அகதிகளின் பிரச்சனையை தீர்த்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதரகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, “லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அதுமட்டுமின்றி உயிர்பிழைத்துள்ள 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பிட்ட சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பெண்கள் மற்றும். குழந்தைகள் உட்பட 26,314 சட்டவிரோத அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் லிபியா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 474 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அதோடு 689 அகதிகளை காணவில்லை. இந்த நிலையில், தற்போது லிபிய நாட்டின் கடற்கரையில் 16 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது” என்று தகவல் அளித்துள்ளது.

Contact Us