இலங்கை மாகாணசபை தேர்தல் எப்போது..? வெளியான தகவல்..!!

 

இலங்கையில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்த இரண்டு விதமான திட்டங்கள் கூறப்படுவதால், கடந்த 4 வருடங்களாக இத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இந்திய வெளியுறவு செயலரான சிரிங்லா, இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சிறுபான்மை தமிழ் கட்சிகளோடு, சந்திப்பு நடத்தியுள்ளார்.

அதன்பின்பு, விரைவாக மாகாணசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். எனினும், இலங்கை அரசாங்கம் முன்பாகவே தேர்தலை நடத்த முடியாது என்று கூறியிருக்கிறது. மேலும், தேர்தல் குழுவினரிடம், நிதியமைச்சரான பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளதாவது, `இந்த வருட டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருட ஜனவரி மாதத்தில் பழைய விகிதத்தில் இருக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கு புதிதான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அதன்பின்பு, வரும் 2022-ம் வருடம் மார்ச் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது,’’ என்று கூறியிருக்கிறார்.

Contact Us