சீனாவில் கோலாகலமாக ….. கொண்டாடப்பட்ட தசரா திருவிழா…. இந்தியா வம்சாவளியினர் பங்கேற்பு….!!

 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் இந்தியா தூதரகம் அமைந்துள்ளது. அங்கு நடந்த தசரா திருவிழாவில் சீனர்கள் மற்றும் இந்தியா வம்சாவளியினர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். மேலும் தசராவை முன்னிட்டு அங்கு நேற்று முன்தினம் பராம்பரிய விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் அதிகளவிலான பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து இந்தியா கலைப்பொருட்கள், படுக்கை விரிப்புகள், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் போன்றவையும் இருந்தன.

இதனை அடுத்து பரதநாட்டியம், பாலிவுட் பாடல்கள், கதக், தமிழ் நாட்டுப்புற நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முக்கியமாக விழாவில் பெய்ஜிங்கைச் சேர்ந்த தூதர்கள் அவர்களின் குடும்பத்தார், சீனா அதிகாரிகள் மற்றும் இந்தியா வம்சாவளியினர் மற்றும் அவரது உறவினர்களும் கலந்து கொண்டனர்.

Contact Us