பெட்ரோல் பங்கில் நுழைந்த…. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள்…. 9 பேர் பலி….!!

 

பாகிஸ்தானில் உள்ள சாதிகாபாத் நகரில் மஹி சவுக் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் அவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இதேபோன்று கடந்த மாதம் ராவல்பிண்டி நகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Contact Us