களவாக படகில் நியூஸ்லாந்து செல்ல முற்பட்ட யாழ் உட்பட வடமாகாணத்தைச் சேர்ந்த 63 பேருக்கு திருகோணமலையில் நடந்த கதி!!

 

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்வதற்காக திருகோணமலையில் தங்கியிருந்த 63 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கைதானவர்களில் பெண் ஒருவரும் குழந்தைகள் இருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை படகு மூலம் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த தரகரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளும்மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Contact Us