ராட்ஷச முதலையை சுற்றி வளைத்த அனகோண்டா : அபூர்வமாக நடக்கும் ஒரு யுத்தம் !

பிரேசில் நாட்டில் உள்ள கைபியா என்ற காட்டில் நடந்த கொடிய 40 நிமிட யுத்தம் இது. ராட்சச அனகொண்டா பாம்பு ஒன்று பாரிய முதலையை சுற்றி வளைத்தது. முதலையின் முன் கால்கள் ஊடாக, நெஞ்சுப் பகுதியை இறுக்கி அழுத்தி. முதலையை திணற வைத்தது அனகொண்டா. இருப்பினும் சற்றும் சளைக்காத முதலை, உடனடியாக அருகில் உள்ள ஆற்றங் கரை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்தது. காரணம் முதலையில் பலம் தண்ணீரில் தான் இருக்கிறது. ஆனால் அனகொண்டா பாம்பு கூட, நீரில் அதிக நேரம் மூச்சு எடுக்காமல் தம் பிடித்து தாக்கு பிடிக்க கூடிய ஒரு ஜந்து தான், இந்த யுத்தம் சுமார் 40 நிமிடம் இடம்பெற்றதாக, புகைப்படம் பிடித்தவர் கூறுகிறார். முதலையின் வாயினுள் அனகொண்டா பாம்பின் வால் பகுதி சிக்கியதாகவும்.

இதனால் முதலை அதனைக் கடிக்க முற்பட்டும் தோற்றுப் போய் விட்டது. காரணம் அனகொண்டா பாம்பின் தோல் ரப்பரை போன்றது. எந்த விதத்திலும் அதனை காயப் படுத்துவது என்பது மகா கஷ்டமான விடையம். பின்னர் இருவருமே வெல்ல முடியாத நிலையில் அப்படியே கலைந்து சென்றுவிட்டார்கள்.

Contact Us