தமிழ் லெஸ்பியன் காதல்- குடும்ப பெண்ணும் 19 வயதுப் பெண்ணும் ஹோட்டலில்: கணவன் தேடி அலைந்தது தான் மிச்சம் !

திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு, தொடர் அதிர்ச்சிகள் காத்திருந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – ஆறுமுகத்தான் குடியிருப்பை சேர்ந்த (19 வயது) யுவதியும், மாவடிச்சேனை – கரடியனாறு பகுதியை சேர்ந்த (29 வயது) இளம் குடும்பப் பெண்ணும் நீண்ட காலமாக நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர். இந்த இளம் மனைவிக்கு ஒரு பிள்ளையும் உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்கை உறவில் இருந்துள்ள விடையத்தை கணவர் திடீரென கண்டு பிடித்து விட்டார். நீண்ட நேரமாக அவர்கள் தொலைபேசி சாட்டிங்கில் இருந்தவேளை. ஒரு கட்டத்தில் மோபைல் போனை பறித்த கணவர் அதில் உள்ள சாட்டிங்கை வாசித்து விட்டு போனை நிலத்தில் போட்டு உடைத்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க நேற்று முன் தினம்(11) 19 வயது பெண் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, இளம் குடும்பப் பெண்ணையும் அவரது பிள்ளை சகிதம் ஏற்றிக் கொண்டு சென்று விட்டார். கணவர் மனைவியை காணாமல் தவித்து, இறுதியாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இன் நிலையில் தான், குறித்த 2 பெண்களும் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில், அறையை வாடகைக்கு எடுத்து. அங்கே மது(பியரில்) நஞ்சை கலந்து குடித்துள்ளார்கள். நீண்ட நேரமாக அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து பாடல் கேட்ட வண்ணம் இருந்ததோடு. ஒரு குழந்தை அழும் சத்தமும் கேட்க்கவே. ஹோட்டல் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவிக்க. பொலிசார் வந்து 2 பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். மேலும் பிள்ளையை அப்பாவிடம் ஒப்படைத்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Contact Us