பாத்ரூமில் குளிச்சுக்கிட்டிருந்த இளம்பெண்… பக்கத்து வீட்டு பையன் செஞ்ச வேலைய பாருங்க!

வீட்டு பாத்ரூமில் குளித்து கொண்டிருந்த இளம்பெண்ணை, பக்கத்து வீட்டு இளைஞன் மறைந்திருந்து செல்ஃபோனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர், தனது வீட்டு பாத்ரூமில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது Exhaust Fan இருக்கும் பகுதியிலிருந்து சத்தம் வருவதை அப்பெண் கவனித்துள்ளார்.

முதலில் ஃபேனின் சப்தம் என்று நினைத்திருந்த பெண், அப்பகுதியை உற்று நோக்கியபோதுதான் குளிப்பதை மர்ம நபர்கள் யாரோ வீடியோ பிடிப்பதை உணர்ந்தள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கூச்சலிடவே வீடியோ எடுத்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி மாங்காடு போலீசார் மர்ம நபரை தேடினர். போலீசாரிடம் வசமாய் சிக்கிய அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், உளுந்தூர்பேட்டை சேர்ந்த இளைஞர் (25) என்பதும், இளம்பெண்ணி்ன் பக்கத்து வீட்டில் தங்கி கொண்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

Contact Us