“ச்சை என்ன கருமம் இது”… ஜூம் மீட்டிங்கில் ஷாக் கொடுத்த பள்ளி ஆசிரியர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

 

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் தான் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்குகள் கூட ஜூம், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைனிலேயே நடக்கிறது. அந்த வகையில் ஜமைக்காவில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். அதில் ஒருவர் “ஆசிரியர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் பணிபுரிவது மிகவும் கடினம்” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வேறு ஒருவரின் ஸ்க்ரீனை பார்த்தபடியே வீடியோ கான்ப்ரன்சில் கலந்து கொண்ட அனைவரின் கவனமும் இருந்துள்ளது. அதாவது அந்த ஆசிரியர் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அந்த கூட்டத்தில் இருந்த அனைவரும் நிர்வாணமாக இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து தற்காலிகமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அந்த வீடியோ சில நாட்களில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களும் எழுந்தது. ஆனால் ஜமைக்கா நாட்டு ஊடகம் அந்த ஆசிரியர் இந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த ஆசிரியர் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்கவில்லை தவறுதலாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Contact Us