பெற்றோர்கள் கவனத்திற்கு..! இன்ஸ்டாகிராமில் அம்மா குளிப்பதை லைவ் போட்ட குழந்தை… கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பெண்..!!

 

குழந்தையை வளர்ப்பது என்பது யாருக்கும் எளிதான காரியம் அல்ல. அதாவது குழந்தைகள் தெரியாமல் செய்யும் விஷயங்கள் கூட பெற்றோர்களை கஷ்டமான சூழ்நிலைக்கு ஆளாக்கும். அதேபோல் குழந்தைகள் செய்யும் சில தவறுகள் சில நேரங்களில் வேடிக்கையாக கூட தெரியலாம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தனது மகளால் நேர்ந்த கஷ்டமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் பிரியண்ணா என்ற பெண் மொபைல் போனை படிப்பதற்காக தனது மகளிடம் கொடுத்து விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அந்த குழந்தைக்கு சிறு வயது என்பதால் மொபைல் போனை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அந்தக் குழந்தையின் தாய் பிரியண்ணா மொபைலில் கல்வி தொடர்பான ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் அந்த ஆப்பிலிருந்து வீடியோ ஒன்றை போட்டு தனது மகளிடம் கொடுத்து விட்டு குளிப்பதற்காக பிரியண்ணா சென்றுள்ளார். இதையடுத்து அந்த குழந்தை மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டச் ஸ்கிரீனை தொட்டதும் திடீரென வீடியோ மறைந்துள்ளது.

இந்நிலையில் அவளும் மொபைல் போனை தனக்கு தெரிந்தவாறு நோண்டி பார்த்துள்ளார். அதன் பிறகு பாத்ரூமின் கதவை தட்டி தனது அம்மாவிடம் விவரத்தை கூறியிருக்கிறாள். பின்னர் அந்த குழந்தையின் தாய் பிரியண்ணா போனை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து மொபைல் போனை வாங்கி அந்த குழந்தைக்கு வீடியோவும் எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து திடீரென நோட்டிபிகேஷன் வந்துள்ளது.

அதனை கவனித்த அவர் இன்ஸ்டாகிராம் செயலியில் லைவ் ஓபனில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு பேக் கேமராவில் லைவ் பதிவாகி கொண்டிருந்ததையும் நிறுத்தியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த கஷ்டமான அனுபவத்தை பிரியண்ணா டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு பலரும் இதேபோல் எங்கள் குழந்தைகளால் நாங்களும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

அதிலும் ஒரு பெண் நான் ஒரு முறை பாத் டப்பில் குளித்துக் கொண்டிருந்தபோது தனது மகள் ஃபேஸ்புக்கில் தெரியாமல் லைவ் செய்து விட்டாள் என்று தனது அனுபவத்தை கமெண்டில் பகிர்ந்துள்ளார். இருப்பினும் சிலர் செல்போன் அமைப்பில் குழந்தைகளுக்கான மோடை வைத்துக் கொடுத்தால் வேறு எந்த ஆப்புகளையும் அவர்களால் பயன்படுத்த இயலாது என்று அறிவுரை கூறியுள்ளனர்.

Contact Us