மாடியில் இருந்து குதித்த பெண்…. பலியான இரு குழந்தைகள்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்….!!

 

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் Dmitry என்ற 35 வயதான ராணுவ அதிகாரியின் மனைவி Olga Zharkova. இவர் தனது இரண்டாவது குழந்தை பிறகு கடுமையான மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவரின் கணவர் பணி காரணமாக நெடுங்காலமாக Olgaவை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்று வயதான தன் மகளையும் பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையையும் கட்டியணைத்தபடி அவர் வசித்து வந்த குடியிருப்பின் 19ஆவது மாடியிலிருந்து அதாவது சுமார் 190 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனையடுத்து மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த Olgaவின் கணவர் சம்பவத்திற்கு விரைந்து வந்துள்ளார். மேலும் தனது மனைவியும் குழந்தைகளையும் இந்தக் கோலத்தில் கண்ட அவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us