சிறுமியை கிச்சுகிச்சு மூட்டிய…. மகாராணியின் ஆவி…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்….!!

 

பிரித்தானியாவில் முதலாம் மேரி என்று கூறப்படும் மகாராணி ஒருவர் வாழ்ந்த வீட்டை Lesley Reynolds என்பவர் வாங்கியுள்ளார்.  இப்போது அந்த வீட்டை அவர் தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். மேலும் அந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 600 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும். இதனையடுத்து அந்த விடுதியில் தங்க வருபவர்கள் சில வினோதமான அனுபவத்தை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து Lesleyயின் பேத்தியான ஒரு சிறுமி கூறியதில் ” நான் இந்த விடுதியின் 16ஆவது அறையில் உறங்கினேன். அந்த சமயம் எனது காலில் எவரோ கிச்சுகிச்சு காட்டுவது போன்று தெரிந்தது.

மேலும் மகாராணி மேரி பரிவாகத்தான் நடந்து கொண்டார்” என்றும் அந்த சிறுமி கூறியுள்ளாள். ஆனால் இது உண்மையா என்பதை கண்டறிவதற்காக ஆவிகளுடன் பேசுபவரான Lee Whyberd என்பவர் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவரோ வேறு ஒரு அனுபவத்தை சந்தித்ததாக கூறியுள்ளார். அதாவது, தன்னை யாரோ மெத்தையுடன் சேர்ந்து கழுத்தை நெறிப்பது போல் இருந்ததால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் சிலரோ அச்சுறுத்தும் வகையில் மகாராணி தங்களை உரசியதாகவும் கண்ணாடியில் அவரின் பிம்பம் தெரிந்ததாகவும் கூறியுள்ளனர்.

குறிப்பாக மகாராணி மேரியின் வீடானது 1590 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அவர் பிரித்தானியா 1553 முதல் 1558 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்துள்ளார். அதிலும் இவர் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவே தனது பிரிவில் சேர மறுத்த புரொட்டஸ்டன்ட் சபை குழுவைச் சேர்ந்த 280 பேரை தீயிட்டு  கொளுத்த ஆணையிட்டுள்ளார். அதனால் இவர் ’Bloody Mary’ என்று அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் கட்டிடத்தின் உரிமையாளரான Lesley கூறியதில் “ராணியால் விடுதியில் தங்குபவருக்கு எந்தவொரு இன்னலும் இல்லையெனில் பரவயில்லை. ஒருவேளை அவர் எவருக்காவது தொந்தரவாக இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Contact Us