“ஒரு தடவை வந்துடு ,அப்புறம் நான் ஒதுங்கிடுறேன்” -நாப்பது வயசு டீச்சரை டார்ச்சர் செய்து நடந்த பயங்கரம்

 

ஒரு பேஸ் புக் நண்பரால் ஒரு டீச்சர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் காட்லோடியா பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணிபுரிகிறார் ,அவருக்கு பேஸ் புக்கில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஒருவர் நண்பராக வந்தார் .
பேஸ்புக்கில் வந்த வாஸ்ட்ராலைச் சேர்ந்த ரூபேஷ் பட்டேல் என்ற 33 வயதான அந்த நபர் அந்த டீச்சரிடம் நட்போடு பழகினார் .அதன் பிறகு அந்த இருவரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டார்கள் .பின்னர் தினமும் அரட்டையடித்து வந்தனர்
பின்னர் அந்த டீச்சரை அந்த படேல் ஒரு முறை உறவு கொள்ள பலமுறை அழைத்தார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார் .இதனால் கோபமான படேல் அந்த டீச்சரிடம் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி ஒரு இடத்திற்கு கூப்பிட்டார் .அவரும் வெறும் சந்திப்புதானே என்ற நம்பிக்கையில் அவர் சொன்ன இடத்திற்கு சென்றார் .அப்போது அங்கு ஒளிந்திருந்த படேல் அந்த டீச்சரை கடத்தி சென்று பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .அதன் பிறகு அந்த டீச்செர் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர் .இப்போது , படேலை காட்லோடியா போலீசார் கைது செய்தனர். திங்களன்று, அவர் ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

Contact Us