“வேலை தர்றேன்னு சேலையை இழுத்து ..”ஒரு ஆபிசில் இன்டர்வ்யூவுக்கு வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நால்வரை போலீஸ் கைது செய்தது

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ‘எம்பி ஆன்லைன் கியோஸ்க்’ என்ற நிறுவனத்தை சையத் யாகூப் அலி கான் (51), முகமது அப்ரார் கான் (31)ஆகியோர் நடத்துகின்றனர் .அந்த கியோஸ்கில் முகமது ரஹ்மான் (40),ஷாரிக் கான் (29) ,ஆகியோர் பணிபுரிகின்றனர் இந்த நால்வரும் போபாலின் ஆரிப் நகர் பகுதியில் வசிப்பவர்கள்.
அவர்கள் ஆனலைனில் கல்வி மற்றும் வேலை வாங்கி கொடுக்கும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் .
அவர்களிடம் அந்த பகுதியில் வசிக்கும் மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் ஒரு 23 வயதான பெண், ,வேலை கேட்டு கடந்த திங்கள் கிழமை தொடர்பு கொண்டார் .அப்போது அந்த நிறுவனத்தின் யாகூப் கான் அந்த பெண்ணை ஆபிஸிற்கு வர சொன்னார் .
அவரின் பேச்சை நம்பி சென்ற அந்த பெண்ணை அந்த ஆபிசில் வைத்து நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று மிரட்டி அனுப்பினர் .ஆனால அந்த பெண் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த நால்வர் மீதும் புகார் கொடுத்தார் .அந்த பெண்ணின் புகாரின் பேரில் அந்த நால்வரையும் போலீசார் கைது செய்தனர் .

Contact Us