டாங்கர் ஓட்டுனர் விசாவில் காரே ஓட்டத் தெரியாத நபர்கள் லண்டன் வந்து குதிக்கிறார்கள் தெரியுமா ?

5,000 வெளிநாட்டு டாங்கர் ஓட்டுனர்களை பிரித்தானியாவுக்குள் எடுக்க, பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியது. இவ்வாறு விசாவில் வரும் பலர், ஒட்டுனர்களே இல்லை என்ற விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த டாங்கர் ஓட்டுனர் விசாவை பயன்படுத்தி, பல கம்பெனிகள் தமக்கு வேண்டப்பட்ட நபர்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு கார் கூட ஓட்டத் தெரியாது என்பது பெரும் அதிர்ச்சியான விடையம். இதனை கண்டு பிடித்துள்ள உள்துறை அமைச்சு(ஹோம் ஆபீஸ்) மூலம் கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. பல ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால் யார் ஓட்டுனர்கள் என்பது புரியவில்லை என்கிறது பிரிட்டன் உள்துறை அமைச்சு.

அட எதில் எல்லாம் தில்லு முல்லு செய்வது என்று ஒரு அளவே இல்லையா ?  Source : Home Office : Multinational firms are ‘abusing’ a visa scheme allowing them to bring foreign workers into Britain, report finds:

Contact Us