அடித்த மனைவி -துடித்த கணவர்-ரசித்த மகள் -அப்படி அந்த நபர் என்ன செஞ்சார் தெரியுமா ?

 

தினமும் குடித்து விட்டு சண்டை போட்ட கணவரை அவரின் மனைவியும் மகளும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் பூமிபாலன் என்ற நபர் தன்னுடைய மனைவி மீரா, மற்றும் டீனேஜ் மகள் பவித்ரா ஆகியோருடன் வசித்து வந்தார் .அந்த பூமிபாலனுக்கு குடிப்பழக்கம் இருந்தது .அதனால் அவர் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தினமும் குடிக்க செலவு செய்து விடுவார் .மேலும் அவர் குடும்ப செலவுக்கும் பணம் தராமல் இருந்தார் .அதனால் அவரின் மனைவி மீரா அவரின் கணவரிடம் பலமுறை குடிப்பதை நிறுத்தி விட்டு ,குடும்ப செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்தார் .ஆனால் அந்த பூமி பாலன் வீட்டில் பணம் கொடுக்காமல் அந்த பணத்தையெல்லாம் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார் .
மேலும் குடித்துவிட்டு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் போய் சண்டை போட்டுள்ளார் .இதனால் அந்த மீரா அவரால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தார் .அதன் பிறகு அவரின் மகளும் அவரின் தந்தையிடம் இது பற்றி எடுத்துக்கூறி மது குடிப்பதை நிறுத்த சொன்னார் .ஆனால் பூமிபாலன் அதை கேட்காமல் என்னேரமும் குடி போதையில் இருந்து அவரின் மனைவி மற்றும் மகளிடம் மேலும் குடிக்க பணம் கேட்டுள்ளார் .அதனால் அந்த இருவரும் சேர்ந்து பூமி பாலனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர் .பிறகு இந்த கொலை பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பூமிபாலனை கொலை செய்த அவரின் மனைவி மீராவையும் அவரின் மகளையும் கைது செய்தனர்.

Contact Us