படகில் 59 இலங்கை தமிழர்கள்…. வெளிவந்த உண்மை…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

 

இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் தீவுக்கு இடையில் ஒரு படகை அமெரிக்க கப்பற்படையினர் வழிமறித்தனர். அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கனடாவுக்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அமெரிக்க கப்பற்படையினர் அந்தப் படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட 59 பேரும் மதுரை மற்றும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து தப்பியவர்கள் என அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அந்த படகு கேரளாவில் உள்ள கொல்லம் இடத்தில் வசித்து வரும் ஈஸ்வரிக்கு சொந்தமானது என அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us