“எனக்கு ஒவ்வொரு இரவும் நரகம்” -ப்ளஸ் ஒன் மாணவிக்கு 28 பேரால் நடந்த பலாத்கார பயங்கரம்

 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 16 வயதான பெண்ணொருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .அந்த மாணவியின் தந்தை ஒரு பிரபல அரசியல் கட்சியில் இருக்கிறார் .அவர் அந்த கட்சியை சேர்ந்த பலருக்கு அந்த பெண்ணை வணிக நோக்கத்தோடு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய அனுப்பியுள்ளார் .
ஆனால் அந்த பெண் பலமுறை இந்த பாலியல் கொடுமைக்கு சம்மதிக்காமல் எதிர்த்தபோது அவர்களால் அந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார் .இந்த சம்பவம் பற்றி அந்த பெண் கூறும்போது ,தனது தந்தை மற்றவர்களை வணிக நோக்கத்திற்காக அழைப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார். அதனால் இந்த நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என்று அவர் கூறினார்.இது போல ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 28 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்
மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் தனது தாயை கொன்றுவிடுவதாகவும் தனது தந்தை மிரட்டினார் என்று அந்த பெண் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், தந்தை உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us