கோட்டபாய எப்ப வருகிறார் என்பதனை சொல்ல முடியாது என்கிறது பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சு… காப்பாற்ற முயற்ச்சியா ?

நவம்பர் மாதம் 1ம் திகதி ஸ்காட் லாந்தில் நடைபெறவுள்ள, உச்சி மாநாட்டில் இலங்கை அதிபர் கோட்டபாய கலந்து கொள்ள உள்ளார் என்ற உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது தொடர்பாகவும். அவர் நிகழ்ச்சி நிரல் தொடர்பாகவும் நாம் அறிய முற்பட்டு, பிரித்தானியா வெளிநாட்டு அமைச்சிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தோம். ஆனால் அதற்கு பதில் தந்துள்ள அமைச்சு, அதனை வெளியிட முடியாது எனவும். அதனை ரகசியமாக தாம் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பொலிசாரிடம் இதே கேள்வியை நாம் முன்வைத்துள்ளோம். கோட்டபாயவுக்கு பாதுகாப்பு வழங்கவுள்ள ஸ்காட் லான் பொலிசாரிடம், அவர் வருகை தொடர்பாக அறிய விரும்புவதாக நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எனவே பொலிசார் இது தொடர்பான அறிவித்தலை விரைவில் எமக்கு தருவார்கள். தகவல் அறியும் சட்டமூலத்தை ஆதாரமாக வைத்தே இந்த கேள்வியை நாம் எழுப்பி உள்ளோம். ஆனால் பிரித்தானிய வெளிநாட்டமைச்சு இலங்கை அதிபரை பாதுகாக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இருப்பினும் தமிழர்கள் ஒன்று திரண்டு பெரும் போராட்டம் ஒன்றை செய்யவுள்ளார்கள். சுமார் 114 நாடுகளின் அரசு தலைவர்கள், முக்கிய மந்திரிகள், அமைச்சர்கள் வருகிறார்கள். 140க்கும் மேற்பட்ட சர்வதேச TV தொலைக்காட்சிகள் அங்கே பிரசன்னமாகி இருக்கும். எனவே தமிழர்கள் செய்யவுள்ள போராட்டம், உலக அளவில் தெரிய வாய்ப்புகள் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

Contact Us