யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்த 46 வயது குடும்பஸ்தரால் 21 வயது மருமகள் கர்ப்பம்!!

 

யாழில் தனது மனைவியின் தமையனின் 21 வயது மகளைக் கர்ப்பமாக்கியுள்ளார் சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணக் குடும்பஸ்தர். கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள தனது தொடர்மாடிக் குடியிருப்பு தொடர்பான வாடகை ஒப்பந்த நடவடிக்கைக்காக இலங்கை வந்துள்ளார் குறித்த குடும்பஸ்தர். சுவிசில் இருந்து குறித்த குடும்பஸ்தரிடம் தனது அண்ணன் மற்றும் பிள்ளைகள், உறவினர்களுக்கு பெருமளவான பொருட்களை மனைவி தனது கணவன் மூலம் அனுப்பியுள்ளார்.

அதனை வாங்குவதற்காக கொழும்பிற்கு மனைவியின் அண்ணன் மகள் மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் சென்றுள்ளார்கள். 3 நாள் கொழும்பில் சுவிஸ்குடும்பஸ்தரின் வீட்டிலேயே அவர்கள் தங்கிய பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்கள். இந் நிலையில் குடும்பஸ்தரின் மனைவியின் அண்ணனின் மகள் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும் திடீர் சுகவீனம் ஏற்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்ட போதே அண்ணனின் மகள் கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.

அங்கு நடந்த விசாரணையின் போதே சுவிஸ் குடும்பஸ்தர் செய்த திருவிளையாடல் வெளிவந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us