தமிழர்களே இன்று முதல் காட்டை தொலைக்க வேண்டாம்: £100 பவுண்டுகள் லிமிட் !

பிரித்தானியாவில் ஒரு காலத்தில் £30 பவுண்டுகளாக இருந்த Contactless payments , கடந்த வருடம் £45 பவுண்டுகளாக இருந்தது. அதற்கு கொரோனாவை காரணம் காட்டியது அரசு. ஆனால் கொரோனா குறைவடைந்து விட்ட நிலையில், Debit &  Credit card லிமிட்டை 100 பவுண்டுகளாக உயர்த்தி உள்ளார்கள். அதாவது Contactless payments 100 பவுண்டுகள்.  சில வேளை நீங்கள் உங்கள் டெபிட் காட்டை தொலைத்து விட்டு, அதனை மறந்தால்… சில நிமிடங்களில் எல்லாம் யாராவது அதனை எடுத்து 100 பவுண்டுகளுக்கு பாவிக்கவும் முடியும். எனவே தமிழர்களே ஜாக்கிரதை. உங்கள் வங்கிகள் தாமாகவே இந்த லிமிட்டை உயர்த்தி உள்ளார்கள். ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்…

நீங்கள் உங்கள் வங்கிகளோடு பேசி லிமிட்டை, தொடர்ந்தும் 45 பவுண்டுகளில் இல்லையென்றால் 30 பவுண்டில் வைத்திருக்க முடியும். அதாவது குறைக்க முடியும். உண்மையில், பிரித்தானிய அரசு டெபிட் காட்டின் லிமிட்டை 100 பவுண்டுகளாக உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காரணம் என்னவென்றால் பண வீக்கம் தாம். 10 வருடங்களுக்கு முன்னர் 30 பவுண்டுகளுக்கு பல பொருட்களை வாங்க முடியும். பின்னர் அது 45 பவுண்டுகளாக உயர்ந்து இன்றும் 100 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. ஏன் எனில் அந்த அளவு காசை நாம் வாரம் தோறும் அல்லது 5 நாட்களுக்கு ஒரு தடவை செலவு செய்ய வேண்டி உள்ளது. பொருட்களின் விலை எகிறியுள்ளது என்பது தான் இதன் மறை முக கருத்து.

Contact Us