இந்தியாவில் பிரபல ரவுடியை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளிய தூத்துக்குடி போலீஸ்!

தூத்துக்குடியில் 18 குற்ற வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன், போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி யைச் சேர்ந்தவர் துரைமுருகன்( 44 )இவர் மீது 18 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

 

சமீபத்தில் பாவூர்சத்திரத்தில் இருந்து ஒருவரை கடத்தி வந்து திருநெல்வேலி அருகே கொன்று புதைத்ததாக சிலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.இதில் முதலாவது குற்றவாளியாக துரைமுருகன் உள்ளார்.

இவரை போலீசார் தேடி பிடித்த நிலையில் முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகவும், வேறுவழியின்றி சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துரைமுருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Contact Us