“யோவ் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?” -பெண் பேராசிரியையை பார்த்து விமான படை அதிகாரி செய்த கேவலம் .

 

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லுாரி பேராசிரியை அங்குள்ள ஒரு கல்லூரியில் பணி புரிகிறார் .அந்த கல்லூரியில் சமீபத்தில் தசரா பண்டிகைக்காக அனைவருக்கும் லீவ் விடப்பட்டது .அதனால் கேரளாவை சேர்ந்த அந்த பெண் பேராசிரியை தசரா விடுமுறைக்காக, பெங்களூரில் இருந்து அவரின் சொந்த ஊரான கோட்டயத்துக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். அவர் ஏற்கனவே முன்பதிவு செய்த பெட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணம் செய்து கொண்டிருந்தார்

அப்போது அந்த ரயில், தமிழகத்தின் திருப்பத்துாரை கடந்து வந்து கொண்டிருந்தது .அப்போது அந்த பெண் பேராசிரியர் பயணம் செய்த அதே பெட்டியில் இந்திய விமான படை ஹவில்தாரான, பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயதான பிரப்ஜோட் சிங், பயணம் செய்தார் .இந்நிலையில் அந்த பிரப்ஜோட் சிங் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அந்த பெண் பேராசிரியை பார்த்து சில சிக்னல் கொடுத்தார் .அதன் பிறகு அவர் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவரிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அந்த பெண் கோவப்பட்டு இந்த பிரப்ஜோட் சிங் செய்த செயலை பற்றி ஈரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். உடேன அங்கிருந்த ரயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில், பிரப்ஜோட் சிங்கை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்

Contact Us